தினம் ஒரு கதை..நீங்கள் தான் கடவுள்
நீங்கள் தான் கடவுள்
ஒரு ஊரில் கணவனை இழந்த சீதா என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவளால் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலை. எனவே குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்துவிட்டு, இவள் தினமும் வேலைக்குச் செல்வாள்.
இப்படி இருக்க ஒருநாள் மாலை நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி தொலைப்பேசியில் அழைத்து குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறினாள். அலுவலகத்தில் இருந்து கிளம்பி மருந்து வாங்க மருந்துக் கடைக்கு சென்றாள். மருந்து வாங்கிவிட்டு தனது மகிழுந்திடம் வந்தாள். மகிழுந்தின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டியதை உணர்ந்தாள்.
என்ன செய்வது எனத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வேலைக்காரி மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகிறது என்று கூறினாள். சீதாவிற்குக் கண்கள் கலங்கின. இறைவா... எனக்கு உதவி செய் எனக் கடவுளிடம் கண்ணீர் வர வேண்டினாள். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் நீண்ட முடியும் தாடியும் வைத்துக்கொண்டு பல நாள் குளிக்காத ஒரு முரடன் போல வந்து சேர்ந்தார்.
சீதா கடவுளே... இது தான் நீ செய்த உதவியா...? என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்தவரிடம் வண்டியின் சாவி உள்ளே மாட்டிக்கொண்டது எனக் கூறினாள். வந்தவர் சீதாவிடம் தான் உதவி செய்வேன் என்று கூறி ஒரு நிமிடத்தில் மகிழுந்தின் கதவை திறந்து கொடுத்தார். சீதா நன்றி கூறி நீங்கள் தான் கடவுள் என்று கூறினாள். அதற்கு அவர் இல்லை.... நான் நேற்று தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மகிழுந்து திருடன்... ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.
சீதா மகிழ்ச்சியுடன் நான் கடவுளிடம் உதவிக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வல்லுநரை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறி நன்றியுடன் விடை பெற்றார். அவர் செய்த சிறிய உதவியின் அளவை உணர்ந்தார்

No comments: