Breaking

அக்கி நோய் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதற்கான நாட்டு வைத்திய முறைகளை அறிந்து கொள்வோம்






அக்கி Herpes) என்பது மனிதத்தோலின் மேல் தோன்றும் தீநுண்ம நோய் ஆகும். இது பலவகைப்படும். அவற்றுள் இயல்பான அக்கி, அக்கிப்புடை என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இயல்பான அக்கி, மேற்தோலில் தோன்றக்கூடியது. இது தோன்றும் முன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். இந்நேரத்திலேயே தோலின் மீது நைட்ரசு ஈதர் பூசி, இந்நோய் வராவண்ணம் தடுக்கும்வழக்கம் உள்ளது. நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும்.பின்னர், விரைவில் கொப்புளங்கள் தோன்றும். பொதுவாக இது முகத்திலும், கன்னத்திலும்,மூக்கின் மேலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா ஆகிய நோய்கள் பீடித்திருக்கும் போது இந்நோய் வரலாம்.அக்கி ஒருமுறை வந்தால், மீண்டும் பலமுறை வரும் இயல்புடையது ஆகும்.


அக்கி நோய் குணமாக



வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.

அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

மருந்து - 1

நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2

ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.
உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3

சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை. 7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும

No comments:

Powered by Blogger.