குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்!
குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்!
நோய் பாதிக்கப்பட்ட ஒருவரை அல்லது காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனை அழைத்து செல்வதற்கு முன் அவரது உயிரை காப்பதற்கான செயலை செய்வது மிகவும் அவசியம். அந்த அவசர காலத்தில், அவரது உயிரை காப்பதற்கு , அந்த நிலைக்கு தகுந்த முதலுதவி செய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக இந்த அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது குறித்த தெளிவு வேண்டும்.
ஏனென்றால் தவறான சிகிச்சை, பாதிக்கப்பட்ட நபரின் உயிரில் எந்த அபாயத்தையும் ஏற்படுத்த முடியும். பின்வரும் அவசர கட்டங்களில் முதலுதவி வழங்கப்படலாம் - மூச்சுத்திணறல் (தண்ணீரில் மூழ்குதல், தூக்கிட்டுக் கொள்ளுதல் அல்லது தொண்டையில் சிக்கித் தவித்தல்), மாரடைப்பு, இரத்தப்போக்கு, விஷம், எரிச்சல், வெப்ப பக்கவாதம் (அதிக வெப்பத்தால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது), மயக்கம், சுளுக்கு, எலும்பு முறிவுகள் மற்றும் விலங்கு கடி.
முதலுதவிக்கான முக்கியத்துவத்தை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான சூழ்நிலை ஏற்படாது என்று திட்டவட்டமாக கூற முடியாது. பொதுவாக பிள்ளைகள் விளையாடும்போது அங்கும் இங்கும் கீழே விழுவது வழக்கமான செயலாகும். ஆகவே ஓவ்வொரு குழந்தையும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவை பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.
குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்!
ஒரு சிறுவனின் முன்பு யாரவது ஒரு நபர் மயங்கிய நிலையில், எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருக்கிறார், பலமுறை அழைத்தும், கை கால்களை அசைத்தும் அசைவின்றி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மயங்கிய நிலையில் இருப்பவரை தரையில் படுக்க வைக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர் மூச்சு விடுகிறாரா என்பதை சோதிக்கச் சொல்லுங்கள். நெஞ்சில் அழுத்தம் கொடுத்து வேகமாக தேய்க்கச் சொல்லுங்கள். ஒருவேளை அவர் மூச்சு விடுவதை குழந்தையால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் உடனே அவசர சிகிச்சை எண்ணுக்கு அழைக்க சொல்லிக் கொடுங்கள்.
ஒருவர் மூச்சு விடுகிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். ஒருவேளை அந்த நபர் மூச்சு விடுகிறார் என்றால் அவரை சௌகரியமாக ஒரு இடத்தில் அமர வைத்து தலையை மட்டும் சாய்வாக வைத்து மற்ற பகுதிகளை மேல்நோக்கியபடி உட்கார வைக்கச் சொல்லுங்கள் இதனால் அந்த நபர் எளிதாக மூச்சு விட முடியும் மற்றும் இரத்த ஓட்டம் எல்லா இடங்களுக்கும் சீராக செல்ல உதவும்.
ஒரு காயத்திற்கு மருந்து தடவி கட்டுப்போடும் அடிப்படை வழியை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். அதிகரித்த இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்தம் வழியும் இடத்தில் இறுக்கமாக துணியை கட்ட வேண்டும். மேலும் காயம் அடைந்தவர் ஏற்கனவே அதிக பீதியுடன் இருக்க நேரலாம் என்பதால் அந்த சூழலை எந்த அளவிற்கு கூலாக அணுகலாம் என்பதனையும் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். காயம் பட்ட இடத்தில் ஐஸ் பேக் அல்லது ஐஸ் பாட்டில் வைப்பதால் இரத்தப்போக்கு நிறுத்தப்படும்.
தலையில் ஏற்பட்ட காயம் பெரிய அபாயத்தையும் சில நேரங்களில் உண்டாக்கலாம். தலையில் காயம் ஏற்பட்டால், உடனே காயம் அடைந்த இடத்தில் குளிர்ச்சியான பொருளை வைக்கவும். குளிர்ச்சியாக இருக்கும் இலையுடைய காய்கறிகளை ஒரு டவலில் சுற்றி காயம் உள்ள இடத்தில் வைத்து அழுத்த உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். காயம் பட்ட பகுதி வீங்காமல் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். மேலும் அந்த நேரத்தில் சத்தமின்றி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு கற்றுத் தாருங்கள்.
மார்பு பகுதி அல்லது கழுத்து பகுதியில் ஏற்படும் இறுக்கம் காரணமாக சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் மூச்சு விடுவது அல்லது இருமுவது கடினமாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் நோயாளியின் முதுகு பகுதியை தடவி கொடுத்து மென்மையாக தட்டவும். இதனால் அவர் மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் குறையலாம்.
தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்|எப்போது அவசர உதவியை நாட வேண்டும்???
வீட்டில் பொதுவாக அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படுவது தீக்காயம். தீக்காயம் என்பது எரிச்சலை தருவதோடு அந்த இடத்தில் உள்ள செல்களை இறக்க செய்து தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது எதனால் ஏற்பட்டது மற்றும் எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பதை கொண்டு நாம் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு சில காயங்கள் தீவிரமாகாமல் இருக்கவும் உயிர் இழப்பை தடுக்கவும் அவசர உதவி பெறுவது அவசியம்.
காயங்களின் வகைகள்:
1. முதல் டிகிரி தீக்காயங்கள்:
இதனை சூப்பர்ஃபீஷியல் காயங்கள் என்றும் சொல்வர். இந்த காயத்தில் ஒரளவு வீக்கம் மற்றும் அந்த இடமே சிவப்பாக காணப்படும். இந்த வகை தீக்காயத்தில் கொப்புளங்கள் இருக்காது.
2. இரண்டாவது டிகிரி தீக்காயங்கள்:
இது போன்ற தீக்காயத்தில் தோல் தடிசாக காணப்படும். இதில் கொப்புளங்கள் ஏற்படும். தோலின் அடுக்குகளில் பாதிப்புகள் உண்டாகும்.
3. மூன்றாம் டிகிரி தீக்காயங்கள்:
இந்த வகை தீக்காயம் ஏற்பட்டால் நரம்பு மற்றும் டெர்மிஸ் பாதிப்பால் அந்த இடமே மறத்து போய் காணப்படும்.
4. நான்காம் டிகிரி தீக்காயங்கள்:
இது தோலின் உள்ளே ஊடுருவி தசைகளை பாதித்து சீர்படுத்த முடியாத காயங்களை ஏற்படுத்தும்.
வீட்டில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்???
பெரும்பாலான தீக்காயங்களுக்கு அவசர உதவியை பெருவதே நல்லது. சிறிய காயமாக இருந்தால் அதிலிருந்து விடுபட கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
★ஒரு ஆன்டிபாக்டீரியல் சோப்பை எடுத்து கைகளை நன்றாக கழுவுங்கள்.
★வலி மற்றும் வீக்கத்தை குறைக்க தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சில்லென்று இருக்கும் தண்ணீரை ஓட விடுங்கள்.
★தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு காயத்தை கழுவுங்கள்.
★தோல் பிளந்து போகாமல் இருந்தால் ஆன்டிபயாடிக் ஆயின்மென்டை தடவுங்கள்.
★ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பேன்டேஜை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் லூசாக சுற்றிக் கொள்ளுங்கள்.
எப்போது அவசர உதவியை பெற வேண்டும்???
இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட டிகிரி தீக்காயம் ஏற்படுமாயின் கண்டிப்பாக அவசர உதவியை நீங்கள் பெற வேண்டும்.


No comments: