Breaking

வாயுத்தொல்லையை சரிசெய்யும் பிரிதிவி முத்திரை பிரிதிவி முத்திரை செய்யும் முறை

                                        


வாயுத்தொல்லையை சரிசெய்யும் பிரிதிவி முத்திரை
பிரிதிவி முத்திரை செய்யும் முறை

விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள். வஜ்ராசனம் அல்லது பத்மானசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம். காலை, மதியம், மாலை, மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம் மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.
பலன்கள் :

தோல் முழுவதும் நன்கு பளபளப்பாகத் திகழும். மன, உடல் சோர்வை நீக்கும். மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக இரத்தத்தில் சேரும். உடல் எடை படிப்படியாக கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இந்த முத்திரை உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை சரிசெய்து சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கின்றது.

No comments:

Powered by Blogger.