Breaking

ஏப்ரல்-02. பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மனி இயற்கையியலாளர்- மரியா சிபில்லா மெரியன் (Maria Sibylla Merian) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- ஏப்ரல்-02.


பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மனி  இயற்கையியலாளர்- மரியா சிபில்லா மெரியன் (Maria Sibylla Merian) பிறந்த தினம்.


பிறப்பு:-

ஏப்ரல்-02, 1647 ஆம் ஆண்டு,
பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனியில் பிறந்தார்.


ஆராய்ச்சிகள்:-

பூச்சிகள் மற்றும் தாவரங்கள் மீது தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மேலும் பூச்சிகளின் வளர்சிதை உருமாற்றம் பற்றி ஆய்வு செய்து விளக்கினார். இது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் பூச்சியியல் entomology துறைக்கு வழிவகுத்தது.
மேலும் வளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகளைப் பற்றி அறிய  கம்பளிப்பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள்:-

தனது 52 ஆவது வயதில் சுரிநாமுக்குச் சென்ற மரியா அங்கிருந்த பூச்சிகள், தவளைகள், பாம்புகள் உள்ளிட்ட பலவற்றை ஓவியமாக வரைந்தார்.



நூல்கள்:-

சுரிநாமில் அவர் வரைந்த ஓவியங்களைத் தன் கண்டுபிடிப்புகளோடு 'மெட்டமார்ஃபசிஸ் இன்ஸெக்டோரம் சுரிநாமென்ஸியம்' எனும் புத்தகமாக வெளியிட்டார்.

1705 ஆம் ஆண்டு வெளியான அந்தப் புத்தகம் அதுவரை மண்ணிலிருந்து பூச்சிகள் நேரடியாகத் தோன்றுகின்றன என்ற கருத்தை மாற்றியது.

மறைவு:-

ஜனவரி-13, 1717 ஆம் ஆண்டு, தனது 69 வது வயதில் ஆம்ஸ்டர்டமில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.