Breaking

ஏப்ரல்-02. ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்- சாமுவேல் பின்லே பிரீஸ் மோர்ஸ் மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-02.


ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்- சாமுவேல் பின்லே பிரீஸ் மோர்ஸ் மறைந்த தினம்.


பிறப்பு:-


மாஸ்ஸாசு செட்ஸில் அமைந்துள்ள சார்லஸ் நகரத்தில் ஏப்ரல்-27, 1791 இல் பிறந்தார்.


மோர்ஸ் தந்திக்குறிப்பு:-


குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தந்தித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும்.


பயன்கள்:-

முறைப்படுத்தப்பட்ட வரிசையுள்ள சிறிய மற்றும் நீண்ட பகுதிகள், எழுத்துக்கள், எண்கள், நிறுத்தற்குறிகள் மற்றும் சிறப்பு எழுத்துருக்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பு பயன்படுகிறது.


கணக்கிடும் முறை:-


ஒரு நிமிடத்திற்கான வார்த்தைகள் (WPM) அல்லது ஒரு நிமிடத்திற்கான எழுத்துருக்கள் மூலம் மோர்ஸ் தந்திக்குறிப்பின் வேகம் கணக்கிடப்படுகிறது.


பயன்பாடுகள்:-


1890 இல் மோர்ஸ் தந்திக்குறிப்பு  வானொலி தகவல் தொடர்புக்கும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில்  உயர் வேக சர்வதேசத் தகவல் தொடர்பானது தந்தி இணைப்புகள், கடலுக்கடியில் செல்லும் இணைப்புகள் மற்றும் வானொலி சுற்றுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மோர்ஸ் தந்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்டன.


வான்வழிப் போக்குவரத்து:-


வான்வழிப் போக்குவரத்தில் இண்ஸ்ட்ருமண்ட் விமானிகள் வானொலி அதிர்வெண் உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர். 

விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் அனைவரும் மோர்ஸ் தந்திக்குறிப்பில் சிறிய தொகுப்பினையுடைய அடையாள எழுத்துக்களை (பொதுவாக 2–5 எழுத்துகள் வடிவத்தில் அமைந்த விமான நிலையத்தின் பெயரை) வெளிப்படுத்துவார்கள். நிலையத்தை அடையாளப்படுத்தும் எழுத்துக்கள் வான்வழி வழிச்செலுத்துதல் அட்டவணையில் இடம்பெற்றிருக்கும். 


 வேகச் சாதனைகள்:-



மோர்ஸ் தந்திக்குறிப்பில் இயக்குபவர்களின் திறன் அவர்கள் பணிபுரியும் ("நகல்") தந்திக்குறிப்பின் வீதம் 40 WPM ஐ விட அதிகமாக இருப்பதை வைத்து புரிந்து கொள்ளப்படுகிறது. 


தந்திக்குறிப்பு நகலிடுதல் சர்வதேச போட்டிகள் இன்றும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. 




1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆஷிவில்லேயில் நடைபெற்ற போட்டியில் டெட் ஆர். மெக்கல்ராய் 75.2 WPM ஐ முடித்திருந்தது இன்றும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது.


பொது மக்களுக்கான பயன்பாடு:-


பொது மக்களின் ஒரு முக்கிய பயன்பாடு SOS வழியாக உதவிக்கான சமிக்ஞை ஆகும் "· · · — — — · · · ". இதனைப் பல வழிகளில் அனுப்ப முடியும்: கீயிங் ரேடியோ ஆன் மற்றும் ஆஃப், கண்ணாடியை ஒளிரச்செய்தல், ஒளிரும் விளக்கை ஆட்டுதல் மற்றும் இது போன்ற முறைகளைக் கொண்டு அனுப்ப முடியும்.


இறப்பு:-


ஏப்ரல்- 02 ,1872 ஆம் ஆண்டு, தனது 80 வது வயதில்,  நியூயார்க் இல்லத்தில் மரணமடைந்தார்.

மேலும் அவரது உடல் நியூயார்க்கின் புரூக்லின் நகரத்தில் உள்ள கிரீன்-உட் கல்லறையில் புதைக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.