Breaking

ஏப்ரல்-04.இந்தியாவின் மரபணு மாற்று வித்தகர் ஆன்ந்த சக்ரவர்த்தியின் பிறந்த தினம்.





ஏப்ரல்-04.இந்தியாவின் மரபணு மாற்று வித்தகர் ஆன்ந்த சக்ரவர்த்தியின் பிறந்த தினம்.

நீயின்றி அமையாது உலகு! நுண்ணுயிரி.

நுண்ணுயிரி என அழைக்கப்படுபவை கண்ணுக்குப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய உயிரினங்கள் ஆகும்.

இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. பாக்டீரியாக்கள், நுண் பூஞ்சைகள், நுண்பாசிகள் ஆகியன நுண்ணுயிர்கள் ஆகும். நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். 

நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.


வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. 

பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களேயாகும்.இவைகள் வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். இவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பொருள்களை உற்பத்தி செய்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. 

முந்தைய எண்ணெய் கசிவுகள் பல இயற்கையாகவே பாக்டீரியாக்கள் சுத்தமானதாக மாற்ற பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


ஆனந்த மோகன் சக்ரவர்த்தியின், இந்தியாவைப் பிறப்பிடமாகக் விஞ்ஞானி 1960 மற்றும் 1970 இல் மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் மூலம் கடலில் கொட்டிய எண்ணெய் படலங்களை சூடோமோனாஸ் மூலம் உடைத்து அதனையே கடல் வாழ் உயிரிங்களுக்கு உணவாகவும் மாற்ற முடியும் என கண்டறிந்தார் (Bio-remediation).

இந்த மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் கடல் வாழ் உயினிங்கள் சந்திக்க இருந்த மிகப் பெரிய சவாலை ஒரளவு குறைக்க உதவிய சமூக அறிவியலாளர்  ஆன்ந்த சக்ரவர்த்தியின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4, 1938). 

சில வாரங்களில் எண்ணெய் கசிவு சரிசெய்ய அல்லது பாதுகாப்பாக கழிவுகளை அகற்ற மேஜிக் புல்லட் உள்ளது(பாக்டீரியா வட்டம்).

No comments:

Powered by Blogger.