Home
APRIL
ஏப்ரல்-13. அமெரிக்க வானியலாளர், இன்றைய விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டவர்-ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) நினைவு நாள்.
ஏப்ரல்-13. அமெரிக்க வானியலாளர், இன்றைய விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டவர்-ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) நினைவு நாள்.
18:13
Read
நினைவு நாள்:- ஏப்ரல்-13.
அமெரிக்க வானியலாளர், இன்றைய விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டவர்-ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) நினைவு நாள்.
வாழ்க்கை வரலாறு:-
தெலாவேரில் உள்ள டோவரில் 1863, திசம்பர் 11 இல் பிறந்தார். காதுவலி தாக்கத்துடன் இருந்தவர்.
கல்வி:-
உவெசுலிக் கருத்தரங்கக் கல்விக்கழகம், 1880இல் மசாச்சூசட்டில் உள்ள வெல்லெசுலிக் கல்லூரியின் பள்ளியில் படித்தார். இவர் அமெரிக்க இயற்பியலாளர் சாரா பிரான்சிசு வைட்டிங் என்பவரிடம் கல்வி கற்றார். இவர் 1884இல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
ஒளிப்படக்கலையில் பயிற்சி பெற்று, 1892 இல் ஐரோப்பா முழுவதும் தன் பிலேர்பேழைக் கருவியால் ஒளிப்படங்கள் எடுத்துள்ளார்.
தொழில்:-
வானில் உள்ள ஒளிப்படப் பருமை எண் 9 கொண்ட ஒவ்வொரு விண்மீனையும் படம்பிடித்து வரைந்து என்றி டிரேப்பர் அட்டவணையை நிரப்பி முடிக்க, ஆர்வார்டு வான்காணக இயக்குநரான எட்வார்டு சி. பிக்கெரிங் அமர்த்தும் பெண் பாலாருக்கான பணியாகும்.
பிக்கெரிங் நீண்ட கால அட்டவணைத் திட்டத்தில்
விண்மீன்களின் வகைப்பாட்டுக்கான ஒளியியல் கதிர்நிரல்களைப் பெற்று அவற்றைக் கொண்டு கதிர்நிரலால் விண்மீன்களை வகைப்படுத்தி சுட்டி (Index) உருவாக்குவர்.
விண்மீன் வகைப்பாட்டை எளிதாக நினைவுகொள்ள, "Oh Be a Fine Girl, Kiss Me" என்ற நினைவியைஉருவாக்கினார். கதிர்நிரல்களை 1901இல் வெளிஇட்டார்.
கெனானின் 500,000 விண்மீன்களை வகைப்படுத்தினார்.
மேலும் அவர் 300 மாறுபடும் விண்மீன்களையும், ஐந்து வளிம ஒண்முகில்களையும், ஒரு கதிர்நிரல் இரும விண்மீனையும்
கண்டுபிடித்தார்.
மேலும் 200,000 மேற்கோள்கள் அடங்கிய நூல்தொகைஒன்றையும் உருவாக்கினார்.
பன்னாட்டு வானியல் ஒன்றியம்1922 மே 9 இல் விண்மீன் வகைப்பாட்டு முறையை ஒரு சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியது. அது இன்றும் கூட விண்மீன் வகைபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
விருதுகள்,கவுரவம்:-
தேசிய பெண்கள் வாக்கினர் குழுவால் ’’மிகச் சிறந்த வாழும் பெண்டிர் பன்னிருவருள் ஒருவர்’’ எனப் பட்டியலிடப்பட்டவர்.
அமெரிக்க வானியற் கழக அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் கெனான் குழிப்பள்ளன் எனப்படுகிறது.
குறுங்கோள் 1120 கெனானியா
இவர் பெயரைத் தாங்கியுள்ளது.
’’வான்தொகைக் கணக்கெடுப்பவர்’’ எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ளார்.
ஒவ்வோராண்டும் 1934 முதல் ஆன்னி ஜே. கெனான் வானியல் விருது, வட அமெரிக்கப் பெண் வானியலாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
இறப்பு:-
1940 இல் ஓய்வு பெறும்வரை வானியலில் 40 ஆண்டுகள் பணியாற்றிய
கெனான் 1941, ஏப்ரல் -13 இல் 77ஆம் அகவையில் மசாசூசட், கேம்பிரிட்ஜில் இயற்கை எய்தினார்.
ஏப்ரல்-13. அமெரிக்க வானியலாளர், இன்றைய விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டவர்-ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) நினைவு நாள்.
Reviewed by JAYASEELAN.K
on
18:13
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
18:13
Rating: 5


No comments: