Breaking

ஏப்ரல்-14. அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற இயற்கை குறித்த எழுத்தாளர்-ராச்சல் லூயி கார்சன்.






இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-14.

அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற இயற்கை குறித்த எழுத்தாளர்-ராச்சல் லூயி கார்சன்.

வாழ்க்கை வரலாறு:-

ஐக்கிய அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில், ஸ்பிரிங்டேல்  எனும் இடத்தில் 1907, மே- 27 ஆம் தேதி ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார்.

அவர் 8- வயதிலேயே மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட  சிறு கதைகளை எழுதியும் வந்தார்.

கார்சன் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவையில் உயிரியலாளராக தமது பணிவாழ்வைத் தொடங்கினார். 

நூல்கள்:-

1951இல் வெளியான  புத்தகம்- த சீ அரௌண்ட் அஸ் (The Sea Around Us)-நம்மைச் சுற்றியுள்ள கடல்.

அண்டர் த சீவின்ட் - கடற்காற்றின் கீழேயும்( இந்நூல்கள் கடல்வாழ் உயிரினங்கள்,கடற்கரையிலிருந்து மேற்கடல்,ஆழ்கடல் வரை, பற்றிய தகவல்களை ஆராய்ந்தது).

அமெரிக்காவில் விழிப்புணர்வு:-

1950களில் கார்சன் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்குறித்தும் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தீந்தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தியதால்- சைலண்ட் இசுபிரிங்(மௌன வசந்தம்) என்ற நூல் அமெரிக்கர்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதனால் தேசிய பூச்சிக்கொல்லிகள் குறித்த கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு டி.டி.டீயும் பிற பூச்சிக்கொல்லிகளும் தடை செய்யப்பட்டன.  இந்நூலின் தாக்கத்தால் "ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை" ஏற்படுத்தப்பட்டது.

உயிரியலாளர்:-

அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டார். 



இங்கு இவர் கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்கை ஒலிபரப்பும் வானொலி நிலையத்தில் Romance Under the Waters எனும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். 

அது ஒரு வருடத்தில் ஒவ்வொரு வாரமும் ஏழு நிமிட நிகழ்ச்சியாக ஓடியது. அந்நிகழ்ச்சி நீர்நிலை வாழ்வைப்பற்றியதாகும். (மீன்களைப் பற்றியது)

விருதுகள்:-

குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்டர்ட விடுதலைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை மறைவிற்குப் பிறகு அவருக்கு வழங்கினார்.
உயிரியலாளர்:-

இவர் கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்கை ஒலிபரப்பும் வானொலி நிலையத்தில் Romance Under the Waters எனும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். 

அது ஒரு வருடத்தில் ஒவ்வொரு வாரமும் ஏழு நிமிட நிகழ்ச்சியாக ஓடியது.
 அந்நிகழ்ச்சி நீர்நிலை வாழ்வைப்பற்றியதாகும். (மீன்களைப் பற்றியது). 

1936 இல்  அமெரிக்கக் கடற்றொழில் பணியக முழுநேர வேலைக்கு அனுமதிக்கப்பட்ட 2-வது பெண்மணியானார். 

இறப்பு:-

கார்சன் 56 ஆம் வயதில், ஏப்ரல்-14, 1964 ஆம் ஆண்டு  மார்பகப் புற்றுநோயால் இறந்தார்.


No comments:

Powered by Blogger.