Home
APRIL
ஏப்ரல்-16. ஆங்கில வேதியலாளர், உயிர் இயற்பியல் அறிஞர் - ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsie Franklin மறைந்த தினம்.
ஏப்ரல்-16. ஆங்கில வேதியலாளர், உயிர் இயற்பியல் அறிஞர் - ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsie Franklin மறைந்த தினம்.
22:36
Read
இன்று நினைவு நாள்:-ஏப்ரல்-16.
ஆங்கில வேதியலாளர், உயிர் இயற்பியல் அறிஞர் - ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsie Franklin மறைந்த தினம்.
பிறப்பு:-
லண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில்
1920, ஜூலை-25 இல் பிறந்தார்.
ஆராய்ச்சிகள்:-
ஆங்கில நிலக்கரி பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவுப் படிக்கவியல்(X-ray Diffraction Crystallography) மூலம் நிலக்கரி மற்றும் கிராபைட் வடிவமைப்பைக் கண்டறிய பெரும் பங்காற்றியவர். 1945 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
மேலும் கரைசல்களில் உள்ள புரதங்கள்,கொழுப்புகள் தன்மை பற்றி X-ray விளிம்பு விளைவு மூலம் ஆய்வு செய்தார்.
20 ஆம் நூற்றாண்டில் தான் மரபணுக்கு சரியான வடிவம் கண்டு பிடிக்க இவரது ஆராய்ச்சி உதவியது. மேலும் மரபணு இலை சுருள் வடிவம் கொண்டதை இவர் தான் படம் பிடித்தார்.
வைரசுகள் பற்றிய ஆய்வு செய்தார்.
5 ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கை வெளியிட்டார்.
இறப்பு:-
இவருக்கு கருப்பை புற்று நோய் தாக்கத்தால் 1958 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 இல், 37 ஆவது வயதிலே மரணமடைந்தார்.
உண்மைக்கு அங்கீகாரம்:-
வாட்சன், கிரிக் மற்றும் வில்கின்சு மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது பிராங்க்ளின் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. நோபல் பரிசு பரிந்துரை விதிகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் ஓர் ஆராய்ச்சிக்கு பரிசு வழங்க அனுமதி இல்லை. மேலும் இறந்த பிறகு ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கமும் கிடையாது. இதனால் உரோசலிண்டு பிராங்குளினுக்கு நோபல் பரிசு கிடைக்காமலேயே போயிற்று.
பிற்காலத்தில் ரோசலிண்ட் பிராங்க்ளினுடன் பணிபுரிந்தவர்களும் அவருடைய நண்பர்களும், பற்பல ஆராய்ச்சிகளின் போது அவர் எழுதிய குறிப்பேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பிராங்க்ளினை உலகறியச் செய்தனர்.
சாதனை பெண்மணி:-
தனி ஒருத்தியாக சாதனை செய்ததால்
மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான உரோசலிண்டு பிராங்குளின் பல்கலைக்கழகம்.
சிகாகோ,பிராங்க்ளினைப் போற்றும் வகையிலும் 2004-ஆம் ஆண்டு சிகாகோ மருத்துவப் பள்ளி என்னும் பெயரை மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பல்கலைக்கழகம் (Rosalind Franklin University of Medicine and Science) என்று மாற்றி அமைத்தனர். Dedication of Rosalind Franklin University.
ஏப்ரல்-16. ஆங்கில வேதியலாளர், உயிர் இயற்பியல் அறிஞர் - ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsie Franklin மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
22:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:36
Rating: 5


No comments: