ஏப்ரல்-20. விண்மீன் கதிர்நிரல் வகைபாட்டை உருவாக்கிய, அமெரிக்க வானியலாளர் பிலிப் சைல்ட்சு கீனான் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
ஏப்ரல்-20. விண்மீன் கதிர்நிரல் வகைபாட்டை உருவாக்கிய, அமெரிக்க வானியலாளர் பிலிப் சைல்ட்சு கீனான் நினைவு தினம்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
பிலிப் சைல்ட்சு கீனான் (Philip Childs Keenan) மார்ச் 31, 1908ல் பென்னிசில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். கீனான் ஓர் அமெரிக்க கதிர்நிரலியலாளர். இவர் வில்லியம் வில்சன் மார்கன், எஇத் கெல்மன் ஆகியோருடன் இணைந்து 1939 முதல் 1943 வரை ஆய்வு செய்து MKKஎன்ற விண்மீன் கதிர்நிரல் வகைபாட்டை உருவாக்கினார். இந்த இருபருமான (வெப்பநிலை, ஒளிர்திறன்) வகைபாட்டமைப்பு பிறகு1973ல் மார்கனாலும் கீனானாலும் திருத்தியமைக்கப்பட்டது. இன்றும் இந்த மார்கன்-கீனான் வகைபாட்டமைப்பு வழக்கில் உள்ளது.
அவர்களது நீண்டகால ஆய்வில் கீனான் சூரியனைவிடக் குளிர்வான விண்மீன்களுக்குக் கவனம் செலுத்த, மார்கன் சூரியனைவிடச் சூடான வின்மீன்களின்பால் கவனம் செலுத்தினார். கீனான் நெடுங்காலத்துக்கு ஆய்வு செய்து 1999ல் 70 விண்மீன்களுக்கான தகவல்களை இறுதி ஆய்வுரையில் வெளியிட்டார். சிறுகோள் 10030க்கு பில்கீனான் என்று இவரது பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க வானியலாளர் பிலிப் சைல்ட்சு கீனான் ஏப்ரல் 20, 2000ல் தனது 92வது அகவையில் கொலம்பசு, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments: