இன்றைய ராசி பலன், ஏப்ரல் 29, 2020
இன்றைய ராசி பலன், ஏப்ரல் 29, 2020
ராசிபலன் ஜாதகம் அல்ல.
மேஷம்
சிறிய விசயங்களுக்கும் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அகலக்கால் வைப்பதை தவிர்த்தால் விரயங்களிலிருந்து தப்பிக்கலாம். கனவுகள் நனவாகும் நேரம் இது.
ரிஷபம்
மற்றவர்கள் தக்கநேரத்தில் உதவிக்கரம் நீட்டுவர். அன்னப்பறவை, பாலிலிருந்து நீரை பிரித்தெடுப்பது போல,கெட்டவைகளிலிருந்து நல்லனவற்றை பிரித்தெடுப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருப்பதால் மனவருத்தம் அடைவீர்கள். மற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்துவதால், தன்னம்பிக்கையை இழப்பீர்கள்.
கடகம்
சரியான உறக்கமின்றி தவிப்பீர்கள். எடுத்த செயல்களை முடிக்க அதிகம் மெனக்கெடுவீர்கள். தடை, தாமதம் நல்லதுக்கு என்றே எடுத்துக்கொள்ளுங்கள்
சிம்மம்
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மனஅமைதியின்றி தவிப்பீர்கள். பேச்சுவார்த்தையினால் பல்வேறு விவகாரங்களில் தீர்வு காணப்பெறுவீர்கள்.
கன்னி
கற்பனை உலகில் மிதப்பீர்கள். தோல்வியடைந்த விசயங்களை மறுஆய்வு செய்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
மகிழ்ச்சியான நாள். புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள், எடுத்த செயல்களில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
புதிய சவால்களை ஏற்பீர்கள். கேள்வி கேட்பவர்களை தங்களது சாதுர்யத்ததால் மடக்குவீர்கள். கேட்ட எல்லாவற்றிற்கும் விடை கிடைக்காத நிலையிலும், கிடைத்த விடைகளை கொண்டு ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
தனுசு
அந்தரங்க விசயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நீண்டகால பாதுகாப்பு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். நின்று நிதானித்து முடிவெடுப்பதால், இழப்புகளை தவிர்ப்பீர்கள்.
மகரம்
போதிய ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. அரைகுறை நடவடிக்கைகளால் எந்தவொரு காரியமும் முழுப்பெறாது என்பதை உணர்வீர்கள். முடிவுகளை எடுக்க காலக்கெடு நிர்ணயிப்பீர்கள்.
கும்பம்
எதிர்கால நலனுக்காக திட்டம் தீட்டுவீர்கள். நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். உங்களது கருத்துகளுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும்.
மீனம்
அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கை அதிகரிக்கும்.மகிழ்ச்சியான நாள்.


No comments: