தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழக முதல்வர் அவர்கள்.. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்ய வில்லை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்ய வில்லை
அறிவிப்பு..
கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் , தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு , பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கைடிபிடிக்க பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். மேலும் தேர்வு நடத்தப்படும் , ஆலோசனைக்கு பிறகு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD


No comments: