அடுத்த 3 மாதங்களுக்கு வங்கியில் கட்டணம் இல்லை !!
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி வரம்பை மீறி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ் பி ஐ ஏடிஎம்களில் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாகப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது


No comments: