900 முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு....
900 முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு....
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 900 முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
தமிழகத்தில் 2012-2013-ஆம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயா்த்தி அறிவிக்கப்பட்டன. அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
கடந்த 1.1.2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், அது கடந்த 31.12.2019 அன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்தப் பணியிடங்களுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 900 முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் 1.1.2020 முதல் 31.12.2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிகப் பணி இடங்களுக்கான தொடா் நீட்டிப்பு குறித்த நிதித் துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments: