Breaking

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பள்ளிப் பாடத் திட்டத்திலுள்ள அனைத்துப் பாடங்களையும் ஒலி ஒளி (audio and audio-video) பாடங்களாக, மாற்றி ஆன்லைனில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (MOOC based courses) நடத்தி வருவதை அறிந்து கொள்ளலாம்..





தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பள்ளிப் பாடத் திட்டத்திலுள்ள அனைத்துப் பாடங்களையும் ஒலி ஒளி (audio and audio-video) பாடங்களாக, மாற்றி ஆன்லைனில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (MOOC based courses) நடத்தி வருகிறது.

 e-pathshala : http://epathshala.nic.in 

என்ற இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையுள்ள எல்லா பாடங்களுக்கும் ஒலி ஒளி ( audio and audio-video) வடிவில் கிடைக்கின்றன.

2. NCERTOFFICIAL: என்சிஇஆர்டி யின் யூடியூப் சேனலில் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேவையான முழுமையான பாடங்கள் வீடியோ வடிவில் கிடைக்கின்றன.



3. NROER: https://nroer.gov.in 

என்ற மற்றுமொரு இணையதளத்தில் அனைத்து பாடங்களுக்கான வீடியோ மற்றும் விளக்கங்கள் கிடைக்கின்றன.

4. SWAYAM PRABHA Channel லில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான எல்லா பாடங்களும் வகுப்பறையில் நடத்துவது போலவே ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

5. 

www.youtube.com/user/kankoduthavanithan 

இந்தச் சேனலில் ஆங்கிலம் கற்றல் மற்றும் கற்பித்தல் சம்பந்தமான பல பாடங்களும், அது சம்பந்தமான தெளிவான
விளக்கங்களும் கிடைக்கின்றன.



இதைத்தவிர, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலரும் படித்து பயன்பெறும் வகையில் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், ஆக்சன் ரிசர்ச், சுற்றுச்சூழல் அறிவியல், உருது, ஆங்கிலம் கற்பித்தல் தொடர்புடைய பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தற்போது பள்ளிக்கல்வி பாடத்திட்டம் என்பது அகில இந்திய அளவில், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்களைத் தவிர, ஒன்றாகவே உள்ளன. எனவே, என்சிஇஆர்டி வழங்கும் பாடங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இவை அனைத்துமே முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது" என்று கூறினார்.

No comments:

Powered by Blogger.