Breaking

BEML recruitment:- மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் BEML நிறுவனத்தில் வேலை!






BEML recruitment:- மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும்  BEML நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் BEML எனும் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Bharat Earth Movers (BEML) எனும் எர்த் மூவர் நிறுவனத்தில் மார்கெட்டிங், மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : Bharat Earth Movers (BEML)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

பணி : பிஸ்னஸ், லீகல், நிறுவன செயலாளர்

பணியிட விபரங்கள்:

மார்கெட்டிங் பிஸ்னஸ் மேனேஜர்

மார்கெட்டிங் பிஸ்னஸ் மேனேஜர் பணிக்கு இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதிகபட்சமாக 48 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : 

மார்கெட்டிங் பிஸ்னஸ் மேனேஜர் பணிக்கு ரூ. 1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனியர் மேனேஜர் (சட்டம்)

சீனியர் மேனேஜர் (சட்டம்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 39 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : 

சீனியர் மேனேஜர் (சட்டம்) பணிக்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

கம்பெனி செக்ரேட்டரி சீனியர் மேனேஜர்

கம்பெனி செக்ரேட்டரி சீனியர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இன்ஸ்ட்டியூட் ஆப் கம்பேனி செக்ரட்டரியில் உறுப்பினர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : 

இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.



விண்ணப்பிக்கும் முறை : 

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 


என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பெங்களூரு BEML அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் 


என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.