ஹெலிகாப்டர் மணி'? பற்றி அறிவோம்..
ஹெலிகாப்டர் மணி'?
"வானத்திலிருந்து திடீரென ஒரு பணமழை பொத்துக் கொண்டு விழுந்தால் எப்படி இருக்கும்?" என நம்மில் சிலர் அவ்வப்போது நினைப்பதுண்டு; பேசுவதும் உண்டு.
அதேபோல்தான் பிரபல அமெரிக்கப் பொருளாதார வல்லுனரான மில்டன் ஃப்ரைட்மென் என்பவரும் 'ஹெலிகாப்டரிலிருந்து யாராவது வானத்திலிருந்து பணத்தை அள்ளி வீசினால் எப்படி இருக்கும்' என்ற அர்த்தத்தில் 'ஹெலிகாப்டர் மணி' என்ற சொல்லை முதலில் கடந்த 1969ல் உபயோகப்படுத்தினார்.
வழக்கத்திற்கு மாறாக, மதிப்பிட முடியாத அளவிற்கு பணத்தை அச்சடித்து அதை மக்களிடம் புழக்கத்தில் விட்டு, அதன் மூலம் மங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியைக் குறிப்பதுதான் 'ஹெலிகாப்டர் மணி'.
மந்தமான ஒரு சூழலில் 'ஹெலிகாப்டர் மணி' பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என்று கருதப்படுகிறது.
பணவீக்கத்தை அதிகரித்து...
இதன் மூலம், மக்கள் இயல்பாகவும் சுதந்தரமாகவும் பணத்தைச் செலவு செய்வார்கள்; மறுபக்கம், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான மற்ற பல நடவடிக்கைகளை அரசு கவனிக்கத் தொடங்கும்.
மேலும், இதன் மூலம் தேவைகளை அதிகரிக்கவும், பணவீக்கத்தைக் கூட்டவும் முயற்சிக்கலாம். பணவீக்கத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்பலாம்.
பணவீக்க குறைவு அல்லது விலைவாசி வீழ்ச்சி பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிப்பதால், அந்த சமயத்தில் நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் தாம் வாங்கும் பொருட்களின் விலை மேலும் குறையும் எனக் கருதி செலவு செய்யத் தயங்குவர்.
வேலையில்லாத் திண்டாட்டம்:
ஆனாலும், மக்கள் செலவு செய்வதைக் குறைக்கும்போது தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை நிறுத்திக் கொள்ளும்.
மேலும், எதிர்பாராத தற்போதைய சூழலில் வங்கிகளும் கடன் வழங்குவதை நிறுத்திவிடும். இவையெல்லாம் அடுத்தடுத்து நடக்கும் பட்சத்தில் நாட்டில் வேலையின்மையும் அதிகரிக்கும்.
லட்சக்கணக்கானோர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்பதால் 'ஹெலிகாப்டர் மணி' திட்டம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!

No comments: