பாம்புகள் கடித்து விட்டால் அதன் கடிவாயை பார்த்ததும், விஷப்பாம்பா? விஷம் இல்லாத பாம்பா? என்பதை கண்டறியலாம்..
பாம்புகளை கொல்லக்கூடாது. அவைகளை பாதுகாப்பதே நம் கடமை..’
நாம் வசிக்கும் பகுதிக்குள் பாம்புகள் வராமல் இருக்கவேண்டும் என்றால், வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகள், கற்கள், மரத்துண்டுகள் குவிந்து கிடந்தால் அங்கு பாம்புகள் குடியேறி விடும். விஷமில்லாத பாம்புகளுக்கு இரைப்பற்கள் அதிகம் உள்ளன. பாம்புகள் கடித்து விட்டால் அதன் கடிவாயை பார்த்ததும், விஷப்பாம்பா? விஷம் இல்லாத பாம்பா? என்பதை கண்டு பிடித்து விடலாம். கடிபட்ட இடத்தில் நிறைய பல் வரிசைகள் தென்பட்டால் அவை விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்பு களுக்கு இரண்டு பற்களின் தடங்கள் அழுத்தமாக பதிவாகும். இரைப்பற்களின் தடமும் பதிவாகி இருக்கும். அதனால் அதில் இருந்து ரத்தம் வரும். விஷம் உள்ள பாம்புகள் கடிக்கும்போது, உடனே வீக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்’.
நம்முடைய உயிரை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாம்புகள் விஷத்தை உமிழ்வதில்லை.
‘‘நாகப்பாம்புகள் கடித்தாலும், அவைகள் தனது விஷத்தை அநா வசியமாக கக்குவதில்லை. இரையை ஜீரணம் செய்வதற்கு உதவியாக விஷம் இருப்பதால் அவற்றை சீக்கிரத்தில் வீணாக்காது. சேமித்து வைக்கவே விரும்பும். நாகப்பாம்புகள் விஷத்தோடு கடித்தால் அது அதன் கோபத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும்.
பொதுவாக நாகப்பாம்புகள் 80 சதவீதம் விஷம் இல்லாத தன்மையிலேதான் கடிக்கின்றன. அவை தாக்குதலுக்கு ஆளாகும்போது, தற்காத்து கொள்வதற்கு விஷத்துடன் கடிக்கும்.
பாம்பு கடித்தால் பயமோ, பதற்றமோ அடையாமல் இருந்தால் விஷம் வேகமாக ரத்தத்தில் பரவாது. கடித்ததும் ஓடக்கூடாது. அப்படி செய்தால் விஷம் வேகமாக உடலில் பரவும்.
இந்தியா முழுவதும் 302 பாம்புகள் வகையாக உள்ளன. அவற்றுள் நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சட்டி தலையன் ஆகிய வகை பாம்புகள் தான் விஷம் உள்ளவை. சாரைப்பாம்பு உள்பட 282 வகை பாம்புகள் விஷமற்றவை.
கையில் பாம்பு கடித்துவிட்டால், ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.
பாம்பு கடித்த இடத்தில் துணியால் கட்டுவது, பிளேடால் அறுப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது, பாம்பு களின் கடிக்கு, அவைகளின் விஷமே மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். ஏனென்றால் அது விஷமில்லாமலேயே கடிப்பது உண்டு. பாம்பு கடித்து விஷத்தால் இறப்பவர்களை விட, பயத்தாலும், அதிர்ச்சியாலும் இறப்பவர்களே அதிகம்’’.
‘‘நாகப்பாம்புகள் அதிகபட்சமாக ஐந்தரை அடி நீளம் வரை இருக்கும். ராஜ நாகம் என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கேரளாவிலும் அதிகம் உள்ளன. இந்த பாம்புகள் தனது இனத்தையே உணவாக உட்கொள்ளும். 18 அடி நீளம் வரை இருக்கும். இவை பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் இடத்துக்கு வராது. கேரளாவில் வனப்பகுதிகளில் வீடுகள், தோட்டங்கள் இருப்பதால் அங்கு தஞ்சமடைந்து விடும்.
இவை குளிர்ச்சியை அதிகளவில் விரும்பும். பாம்புகள் நாகமாணிக்கத்தை கக்கிவிட்டு இரைதேடும் என்பது மூடநம்பிக்கை. அவற்றின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள். பாம்புகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் பாம்புகளை அனுமதி இல்லாமல் பிடிப்பதும், அடைத்து வைத்திருப்பதும் சட்டப்படி தவறு. நாகப்பாம்புகளை அடர்ந்த வனப்பகுதியில் விடும்போது அவற்றால் வாழ முடியாது.
அவைகள் வீடுகள், தோட்டங்களில்தான் காணப்படும். அங்குதான் அதற்குரிய உணவான எலி, தவளைகள் காணப்படும் என்பதால் அவைகள் வனத்துக்குள் இருப்பதில்லை.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. மகுடி ஊதினால் மயங்காது. ஆனால் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும். அதன் கண்கள் 90 டிகிரி பார்வை கோணத்தில் சுழலும். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் கொண்டது.
நிறைய பேர் அறியாமையால் பாம்புகளை அடிக்க முற்பட்டு, கடி வாங்கி இறக்கின்றனர். பாம்புகள் மனிதர்களை தேடி போய் கடிப்பதில்லை. அவை நமக்கு உதவி தான் செய்து வருகின்றன. வயல் வெளிகளில் நெற்பயிர்களை திருடும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது பாம்புகள் தான்"
1000 மண்புழுக்கள் செய்யும் வேலையை ஒரு மண்ணுளி பாம்பு செய்து விடும். இது தவிர அதன் கழிவுகள், எச்சங்களும் மண்ணின் வளத்துக்கு நன்மை பயக்கும்.


No comments: