Breaking

உடல் எடை அதிகரிக்கணும்மா.. வீட்டில் உள்ள இந்த ஐந்து வகையான உணவுகள் மட்டுமே போதுமானது..







உடல் எடை அதிகரிக்கணும்மா.. வீட்டில் உள்ள இந்த ஐந்து வகையான உணவுகள் மட்டுமே போதுமானது..

இரவில் கொண்டைக்கடலையை ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். கருப்பு கொண்ட கடலை நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. மேலும் ரத்தஓட்டமும் சீராகின்றது. இது உடல் எடை அதிகரிக்க உதவுகின்றது.

அரிசியில் நமது உடலுக்கு தேவையான ஏராளமான கார்போஹைட்ரேட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. இது உடலின் எடையை விரைவாக அதிகரிக்கின்றது. தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது நல்லது.

வெல்லம் மற்றும் வேர்க்கடலை சாப்பிடுவது நமது உடலுக்கு போதுமான புறத்தை அளிக்கின்றது.இது தசைகளின் அளவை அதிகரிப்பதுடன் உடல் எடையை விரைவாக அதிகரிக்க செய்கின்றது.



கடலை மிட்டாய் சாப்பிடலாம் இதில் வெல்லம் மற்றும் வேர்க்கடலை சேர்ந்தே உள்ளது.

பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான அளவு புரதம் கிடைக்கின்றது. பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் கார்போஹட்ரேட்கள் கிடைக்கின்றது. உடல் எடை அதிகரிப்பதற்கும் உதவுகின்றது.

வேகவைத்த உருளைக்கிழங்கு உடல் எடை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றது. வேகவைத்த உருளைக்கிழங்கில் கார்போஹட்ரேட் நிறைந்துள்ளதால் உடல் எடை விரைவில் அதிகரிக்க உருளைக்கிழங்கு உதவுகின்றது.

No comments:

Powered by Blogger.