சுவையான முட்டை கோஸ் பக்கோடா தயார்..செய்வது எப்படி..
சுவையான முட்டை கோஸ் பக்கோடா தயார்..செய்வது எப்படி..
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 300 கிராம்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
கடலை மாவு - 3 ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொரித்தெடுப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
முதலில் முட்டைகோஸை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
நறுக்கிய முட்டைகோஸ் ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதோடு உப்பு, அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, வத்தல் பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். பிசையும்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்திருப்பதை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது சுவையான அருமையான ஒரு முட்டை கோஸ் பக்கோடா தயார்..


No comments: