Breaking

செயற்கைக்கோள்கள் ஏன் மெல்லிய பொன் தகடால் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது?






செயற்கைக்கோள்கள் ஏன் மெல்லிய பொன் தகடால் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது?


செயற்கைக்கோள்களின் பெரும்பான்மையான வெளிப்புற பகுதிகள் தங்க (அல்லது வெள்ளி) தகட்டினால் மூடப்பட்டுள்ளது போல தெரியும். ஆனால், அது தங்கம் அல்ல. அது ஒரு பல-அடுக்கு வெப்பகாப்பு பொருள் (Multi-Layer Insulation) ஆகும். இது சுருக்கமாக MLI என அழைக்கப்படுகிறது.

இது நன்கு எதிரொளிக்கும் திறன் கொண்ட மற்றும் எடை குறைவான, பல மெல்லிய படலங்களால் ஆனது.




செயற்கைக்கோள்களின் பெரும்பான்மையான வெளிப்புற பகுதிகள் தங்க (அல்லது வெள்ளி) தகட்டினால் மூடப்பட்டுள்ளது போல தெரியும். ஆனால், அது தங்கம் அல்ல. அது ஒரு பல-அடுக்கு வெப்பகாப்பு பொருள் (Multi-Layer Insulation) ஆகும். இது சுருக்கமாக MLI என அழைக்கப்படுகிறது.



இது நன்கு எதிரொளிக்கும் திறன் கொண்ட மற்றும் எடை குறைவான, பல மெல்லிய படலங்களால் ஆனது.


பொதுவாக, இந்த மென் படலங்கள், மிக மெல்லிய அலுமினிய பூச்சு பூசப்பட்ட பாலிமைடு (Polyimide) அல்லது ஒருவகை பாலிஸ்டர் (Polyester)-ஆல் ஆனது.

இந்த மென் படலத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் பாலிமைடு, பொதுவாக தங்க நிறத்தை கொண்டிருக்கும்.


இந்த பல-அடுக்கு வெப்பகாப்பு மென் படலத்தின் பின் (உள்) பகுதி அலுமினியம் நிறத்தில் இருக்கும்.

இந்த பல-அடுக்கு வெப்பகாப்பின் தடிமனும், மென் படலங்களின் எண்ணிக்கையும், செயற்கைக்கோள் செயல்பட வேண்டிய இடத்தினைப் பொறுத்து மாறுபடும்.

விண்வெளியில் நிலவும் அதீத வெப்ப நிலையில் இருந்து, செயற்கைக்கோள்களின் கருவிகளை பாதுகாக்க இந்த பல-அடுக்கு வெப்பகாப்பு உதவுகிறது.



செயற்கைக்கோளின் சுற்றுபாதையை பொறுத்து இந்த வெப்ப நிலை மாறுபடும். பொதுவாக, செயற்கைக்கோள்கள் -130 பாகை செல்சியஸ் முதல் 150 பாகை செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பொதுவாக, சூரியனை நோக்கி உள்ள செயற்கைக்கோளின் பகுதி மிக அதிக வெப்ப நிலையையும், சூரிய ஒளி படாத பகுதி மிக குறைவான வெப்ப நிலையையும் எதிர்கொள்ளும்.

மேலும், செயற்கைக்கோள் புவியின் நிழல் பகுதியில் சுற்றிவரும்போது மிக குறைவான வெப்ப நிலையை எதிர்கொள்ளும்.


இந்த பல-அடுக்கு வெப்பகாப்பு, செயற்கைக்கோளை வெப்பக் கடத்தல் (Conduction) மற்றும் வெப்பச் சலனம் (Convection) ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்காது. வெப்பக் கதிர்வீச்சில் (Radiation) இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கும்.

மேலும் விண்வெளியில் வெற்றிடமாக உள்ளதால், அங்கு வெப்பக் கதிர்வீச்சு மூலமே வெப்ப பரிமாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல-அடுக்கு வெப்பகாப்பு, சூரியனிடம் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சினை முழுவதுமாக எதிரொளித்து, அதனை சிதறடிக்கிறது. இதனால் வெப்பம் உட்புகுவது தடுக்கப்படுகிறது. இதனால் வெளிப்புறம் அதிக வெப்பநிலையில் இருந்தாலும், செயற்கைக்கோளின் கருவிகள் தேவையான குளிர் நிலையிலேயே இருக்கும்.

மேலும், வெளிப்புறம் அதி குளிர் வெப்பநிலையில் இருந்தாலும், செயற்கைக்கோளின் கருவிகள் உறைந்துவிடாமல் பாதுகாக்கப்படும். அதாவது, செயற்கைக்கோளின் கருவிகள் வெளியிடும் வெப்பம், வெளியே செல்லாதவாறு தடுக்கிறது.



மேலும், இந்த பல-அடுக்கு வெப்பகாப்பு, விண்வெளி தூசுகளிடமிருந்தும் செயற்கைக்கோளை பாதுகாக்கிறது.

இந்த பல-அடுக்கு வெப்பகாப்பில் தங்கம் பயன்படுத்தபடா விட்டாலும், சில செயற்கைக்கோள்களின், சில கருவிகளில் தங்க முலாம் பூச்சு (Gold Coating) பயன்படுத்தபடுகிறது. இந்த தங்க முலாம் பூச்சு, செயற்கைக்கோள் கருவிகளை புற ஊதா (Ultraviolet) ஒளி கதிர்களிடம் இருந்தும், எக்ஸ் கதிர்களிடம் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் சில கருவிகளின் மின் இணைப்புகளிலும் தங்கம் பயன்படுத்தபடுகிறது.

மேலும் நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளியில் அணியும் உடையுடன் இணைந்த தலைக் கவசத்தில், சிறிதளவு தங்கம் பயன்படுத்தபடுகிறது. இந்த தலைக் கவசத்தின் கண்ணாடியில் உள்ள மிக மெல்லிய தங்க படலம், விண்வெளி வீரரின் கண்பார்வைக்கு தேவையான ஒளியினை (Visible Light) மட்டும் உட்புக அனுமதிக்கிறது, அகச் சிவப்பு (Infrared) கதிர்களை எதிரொளிக்கிறது. இதனால் கண்கள் பாதிப்படைவது தடுக்கப்படுகிறது.

நீங்கள் பார்க்கும் மெல்லிய பொன் தகடு மல்டி லேயர் இன்சுலேஷன் (எம்.எல்.ஐ) என்பதாகும். செயற்கைக்கோளின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் வெப்ப கதிர்வீச்சின் காரணமாக வெப்ப இழப்பைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். விண்வெளியில், வெற்றிடத்தில், வெப்பச்சலனம் மற்றும் வெப்பம் கடத்துதல் கணிசமாகக் குறைந்திருக்கும். இதனால், கதிர்வீச்சு வெப்ப இழப்பின் முக்கிய ஆதாரமாகிறது. இது பெரும்பாலும் மைலார் போன்ற மெல்லிய பிளாஸ்டிக்கால் ஆனது.

இதன் வலுவான பிரதிபலிப்பு குணத்தின் காரணமாக சூரியனின் வெப்பம் மற்றும் ஒளிக்கு எதிராக இரட்டிப்பு காப்பு தருகிறது. இதன் மூலம் உள்ளிருக்கும் எந்திரத்தையும் பாதுகாக்கிறது. இதன் மற்றுமொரு செயல்பாடு தூசுக்கு எதிரான கேடயமாக செயல்படுவதாகும்.

No comments:

Powered by Blogger.