முதுமைத்தோற்றத்தை தள்ளிப்போடும் உணவுமுறைகள்
நாம் அனைவருமே வயதாவதை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் சில சரிவிகித உணவை உண்டு முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம் அல்லவா....
அப்படி என்னென்ன உணவுகள் சாப்பிட்டால் முதுமைத்தோற்றத்தை எளிதில் தள்ளிப் போடலாம். தெரிந்து கொள்வோமா...
✓ கிரின் டீ மற்றும் லெமன் டீயை தினமும் அருந்துவதால் அதிலுள்ள பாலிஃபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் செல்கள் வளர்ச்சி குறைந்து பாதிப்படைவதைத் தடுத்து, இளமையை பாதுகாக்கும்.
✓ கீரை வகைகள், கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், ஆகியவைகளில் ஃப்ளேவினாய்ட், விட்டமின் ஏ, மற்றும் நார்சத்துக்கள் அதிகம் உள்ளதால் முதுமையை தடுத்து இளமையை தக்க வைக்கும்.
தினமும் சமையலில் மஞ்சள் சேர்த்துக் கொண்டு வந்தால், உடலில் நச்சுக்கள் வெளியேறி இளமையை நீட்டிக்கச் செய்யும்.
✓ பாதாம் மற்றும் அக்ரூட் பருப்பில் வைட்டமின் E சத்து அதிகம் உள்ளதால் முதுமையை தடுத்து இளமையை பாதுகாக்கும்.
✓ இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உண்பதன் மூலம் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
✓சோற்றுக் கற்றாழையை சுமார் 30 மி.லி. அளவுக்கு ஜூஸ் எடுத்து, அதனுடன் 100 மி.லி. தண்ணீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் முதுமைத்தோற்றம் தள்ளிப் போகும்.
✓ முக்கியமாக நாளொன்றிற்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவதன் மூலம் சருமம் வறண்டு போகாமலும் இருக்கும் முதுமைத்தோற்றத்தையும் தள்ளிப் போடலாம்.
மேற்கூறிய இந்த உணவுப் பட்டியல் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய சாத்தியமானவையே. தினமும் சிறிது நேரம் ஒதுக்கி இவற்றை உண்டோமானால் முதுமைத்தோற்றத்தை தள்ளிப் போடலாம்.
No comments: