வெற்றி எப்படி உருவாகிறது...? இது ஒரு சின்ன கதை ஆனால் உண்மை கதை.
வெற்றி எப்படி உருவாகிறது...?
இது ஒரு சின்ன கதை ஆனால் உண்மை கதை.
ஒரு சிறுவன் தனது பத்தாம் வகுப்பில் ஒரு தேர்வில் தோல்வி அடைகிறான். அவரது தந்தை இவனுக்கு இனி படிப்பு உதவாது என்று எண்ணி தனது மிதிவண்டியில் அழைத்துச் செல்கிறார். செல்லும் வழியில் நாம் எங்கே செல்கிறோம்? என்று அந்த சிறுவன் கேட்கிறான்.
அதற்கு அவரது தந்தை கூறுகிறார் நமது கிராமத்தில் உள்ள ஒரு கிராம அலுவலரிடம் பேசி அரசு பணி ஒன்றை உனக்கு ஏற்பாடு செய்துள்ளேன் ரசீது சேகரிக்கும் வேலை உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்.
மிதிவண்டியில் இருந்து கீழே குதித்துவிட்டு அந்த சிறுவன் கூறுகிறான். அப்பா எனக்கு அரசு வேலை எல்லாம் வேண்டாம் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதலில் தவறிய அந்த ஒரு தேர்வை முடிக்க வேண்டும் அதுவரை ஒரு தேனீர் கடைக்கு வேலைக்கு செல்கிறேன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி நகர்கிறான். அவனது தந்தையும் என்னமோ செய் என்று கூறிவிட்டு தனது மிதிவண்டியில் பயணிக்கிறார்.
சில கடைகளில் வேலை தேடி அலைந்த பிறகு சோப்பை ஒவ்வொரு கடையாக சென்று விற்கும் ஒரு வேலை கிடைக்கிறது. ஆறு மாதங்கள் அப்படியே நகர்கிறது தனது தேர்வில் வெற்றி பெற்று முடிந்தது. அடுத்ததாக என்ன செய்வது. திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறான்.
பிறகு சிறிது சிறிதாக தன் உழைப்பால் முன்னேற்றம் கண்டு தனது நண்பர் ஒருவரிடம் இணைந்து கதர் வேட்டிகளை மொத்தமாக வாங்கி அதை வியாபாரம் செய்து விற்கின்றனர். பிறகு அதில் வளர்ச்சி பெற்று தனியாக அவரே வாங்கி விற்கத் தொடங்குகிறார்.
அப்போது கதர் ஆடைகள் என்று பெயரிடப்பட்டது மட்டுமே விற்பனை ஆகும் என்கிற நிலை இருந்தது. ஆனால் மற்ற அனைவரையும் போல கதர் என்று எழுதி வைத்துவிட்டு காட்டன் பேட்டிகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்ற அவருக்கு பிடிக்கவில்லை காட்டன் என்றே கூறி நேர்மறையாக விற்பனை செய்தார்.
ஒவ்வொரு கடையாக அழைந்து இது காட்டன் வேட்டிகள் விற்பனை ஆகவில்லை என்றால் நான் திருப்பி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி விற்பனை செய்தார். வேட்டிகளின் தரம் மிகச் சிறப்பாக இருந்தமையால் அந்தத் தரமே விளம்பரங்களாக மாறியது. தனது நேர்மையால் நல்ல முன்னேற்றம் கிடைத்தது.
தானே சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்தார். தற்போது நம் நிறுவனத்திற்கு என்ன பெயர் வைப்பது என்கிற சிந்தனையில் தனது அப்பா பெயரையும் தனது பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவரது அப்பா பெயர் ராமசாமி, அவரது பெயர் நாகராஜ் இரண்டையும் எப்படி சேர்க்கலாம்? அதில் ஒரு பெயர் தோன்றியது.
அப்பாவின் பெயர் ராமசாமி என்பதில் இருந்து #ராம் தனது பெயரான நாகராஜ் என்பதில் இருந்து #ராஜ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து #ராம்ராஜ்_காட்டன்ஸ் என்று வைத்தார். இதற்கு பிறகு உங்களுக்கு அவரது வெற்றியின் அளவைப் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.
உங்களை நீங்களே நம்புவது தான் உங்கள் வெற்றிக்கான முதல் தகுதி.
No comments: