எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ஐஸ்கிரீம்🍦 செய்முறை விளக்கங்கள்...
*💢மூலிகை ஐஸ்கிரீம்💢*
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ஐஸ்கிரீம்🍦
*🍱தேவையான பொருள்கள்:*
பால் அரை கப்
விப்பிங் க்ரீம் முக்கால் கப்
சர்க்கரை நான்கு ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் கால் ஸ்பூன்
துளசி இரண்டு ஸ்பூன்
*🍴செய்முறை:*
பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.
இப்போது ஆற வைத்தப் பாலுடன் சர்க்கரை, வெனிலா எசன்ஸ், க்ரீம் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கரையும் வரையில் கலக்கவும்.
நன்கு கலக்கிய பின்னர் இறுக்கமான மூடி கொண்ட ஒரு பாக்சில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மிக்சியில் அரைத்து மீண்டும் ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
இப்படியாக நான்கு முறை செய்யவும். இந்த சமயத்தில் துளசியை மிக, மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்காவது முறையாக (அதாவது கடைசி முறையாக) அரைத்த பிறகு பொடியாக வெட்டிய துளசியை சேர்த்து லேசாகக் கலக்கி சுமார் ஆறு மணி நேரம் வரையில் நன்கு உறைய வைக்கவும்.
பின்னர் சாப்பிடும் சமயத்தில் எடுத்துப் பரிமாறவும்.
இதோ இப்போது சுவையான துளசி ஐஸ்க்ரீம் தயார்.
சளி இருமல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.


No comments: