Breaking

கல்லூரிகள் திறப்பு எப்போது...? மத்திய அரசுக்கு பல்கலை. மானியக்குழு அளித்த பரிந்துரை





கல்லூரிகள் திறப்பு எப்போது...? மத்திய அரசுக்கு பல்கலை. மானியக்குழு அளித்த பரிந்துரை
நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போதுவரை ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை.



இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை பிறக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேர்வுகளை பொருத்தவரையில் அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இருப்பின் ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த இயலாவிட்டால் ஊரடங்கு காலம் முழுமையாக முடிவடைந்த பிறகு தேர்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.