Breaking

முகக்கவசம் அணிய வேண்டியது ஏன்? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்த சில விளக்கங்கள்.






முகக்கவசம் அணிய வேண்டியது ஏன்? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்த சில விளக்கங்கள்.

1. மனிதர்கள் தும்மும் போதும், இருமும் போதும் சிதறும் சளித்திவலைகள் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கிறது. முகக்கவசத்தை சரியாக அணியும் போது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவுவது தடுக்கப்படும்..

2. மருத்துவர்களுக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் என்.95 (N-95) முகக்கவசம் பரிந்துரைக்கப்படுகிறது. அதை அணிவதால் கிருமி கலந்த சளித்திவலைகளை உள்ளிழுக்கும் ஆபத்து குறையும்.

முகக்கவசத்தை அணிவதற்கு முன்பாக 75% ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி அல்லது சோப்பைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.முகக்கவசத்தை கழற்றும் போது முன்புறத்திலிருந்து கழற்றாமல் பின்புறத்திலிருந்து கழற்ற வேண்டும்.



4. வாய், மூக்கு ஆகிய உறுப்புகளை மறைக்கும்படியும், முகத்திற்கும் முகக்கவசத்திற்கும் இடையில் இடைவெளி இல்லாத அளவுக்கும் கவசத்தை அணியவேண்டும். முகத்தில் அணிந்திருக்கும் போது அதை கைகளால் தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால் கிருமிநாசினி அல்லது சோப்பால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்..

5. முகக்கவசம் அணிந்து சிறிது நேரத்தில் அது அழுக்கு அல்லது ஈரமடைந்தவுடன் அதை மாற்ற வேண்டும். சாதாரண முகக்கவசங்களை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கக்கூடாது..

6. பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை திறந்த வெளியில் வீசக்கூடாது. பாதுகாப்பாக மூடப்பட்ட குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். அதன்பின் கைகளை கழுவ வேண்டும்..

No comments:

Powered by Blogger.