Breaking

மது அருந்தும்பொழுது மனித உடலில் என்ன நடக்கிறது.?




மது அருந்தும்பொழுது மனித உடலில் என்ன நடக்கிறது.?
ஒருவர் மது அருந்தும்பொழுது அதிலிருந்து சிறிய அளவினை  வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக  ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில்  உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் போலீஸ் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)



கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவில் ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் அந்த நபர் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்..நிலைமை. என்னவாகும்?

அதனால்தான் உறுப்புகள் விரைவில் வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

 இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் அடுத்தபடியாக  மூளையை நோக்கி போகும்.

இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்..

ஆல்கஹால் மூளையைத் தொட்டதும்
அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும்.. இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.



BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில் நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது.  கையில் இருக்கும் மதுவைக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள்.  நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். 

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார்.  எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பு 
துண்டித்து போயிருக்கும்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும்.

No comments:

Powered by Blogger.