காது வலிக்குதா? அப்போ இதோ வீட்டு வைத்தியம்..
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*
காது வலிக்குதா? அப்போ இதோ வீட்டு வைத்தியம்..
எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிடலாம். ஆனால் காது வலியை மட்டும் தாங்க முடியாதுன்னு பிறர் சொல்வதை கேட்டிருக்கிறோம்.
ஆமாம், காது வலி மிகவும் கொடுமையானது. அது ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் அதன் வலி இன்னும் அதிகமாகும்.
மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் (யுஷ்டெசியன்) அடைப்பு ஏற்பட்டு நோய்த் தொற்று ஏற்படுவதே காது வலிக்குக் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
தொண்டையில் அழற்சி காரணமாக கூட காது வலி ஏற்படும். நீர் நிலைகளில் குதித்து விளையாடும் போதும், கடல் நீரில் குளித்தாலும் நோய்தொற்று நடுச் செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்பட்டு விடும். சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும் போதும் கூட காதுவலி வரும்.
இந்தக் காது வலியை உடனடியாக குணப் படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். பின்னர் காதில் சீழ் வடிந்து காது கேட்காமல் போக கூட வாய்ப்பு உள்ளது.
துளசி:
துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, காதுகளில் ஏற்பட்ட தொற்று நோய் சரியாகும்.
பூண்டு:
இரண்டு பூண்டு பற்களை கடுகு எண்ணெயில் நசுக்கி பூண்டு கருகும் வரை சூடாக்கவும். இக்கலவை ஆறியவுடன் காதில் ஊற்றலாம். இக்கலவையை நல்லெண்ணையைக் கொண்டும் செய்யலாம். இது காது வலியின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
கடுகு எண்ணெய்:
காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்து கொண்டு வந்துவிடும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
காதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பஞ்சைக் கொண்டு அடைத்தால் பாக்டீர்யா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழித்து விடும்.
உப்பு:
உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் சற்று குறையும்.
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*


No comments: