மண்புழுப்பாம்பு.(Ramphotyphlops braminus) பற்றி அறிவோம்..
மண்புழுப்பாம்பு.(Ramphotyphlops braminus)
மண்புழு போன்ற தோற்றமளிக்கக்கூடிய இவ்வகைப் பாம்புகள் பெரும்பாலும் நம் நாடு முழுவதுமே காணப்படுகின்றன.
பார்ப்பதற்கு மண்புழுபோல் இருந்தாலும் பாம்பு இனத்தைச் சேர்ந்தது.
இவை இரவு நேரங்களில் அதிகமாக நடமாடும்,நஞ்சற்ற பாம்பு வகையைச் சேர்ந்தது.
இப்பாம்பு உருவத்தில் மிகவும் சிறியதாக இருப்பதால் இதன் உணவும் மிக மிகச் சிறியதாகவே இருக்கிறது. கரையான், எறும்பு, மிகச்சிறிய பூச்சிகள் ஆகியவற்றின் முட்டைகளை உண்ணும்.இதன் மேனி பளபளப்பாக இருக்கும், இனப்பெருக்கத்தை பொறுத்தவரை ஆண் துணை தேவை இல்லாமல் முட்டையிடும் ௨டலமைப்பை உடையவை (ஒருவகையில் ஆண்களைச் சார்ந்திருக்காத பெண்ணியவாதி ).
நாம் தூங்கும்போது காதுக்குள் நுழைந்து விடும், இப்பாம்பு கடித்தால் வெண்குஷ்டம் நோய் ஏற்படும் என்றும் மூடநம்பிக்கை நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் இவற்றைப் பார்த்தவுடன் அடித்துக் கொன்று விடுகிறார்கள். நஞ்சற்ற இப்பாம்பு கடித்தால் எப்படி நோய் வரும்? இவற்றால் நமக்கு எவ்விதத்திலும் தீங்கு நேராது.
ஆனால் மனிதனின் தேவையற்ற பயம் மற்றும் புரிதலின்மை காரணமாக பல உயிரினங்கள் பார்த்தவுடன் கொல்லப்படுகின்றன. இந்நிலை மாறவேண்டும், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு பெருக வேண்டும் என்பது நம்முடைய விருப்பம்.
No comments: