Home
MAY
மே-08. அமெரிக்க உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்த தினம்.
மே-08. அமெரிக்க உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்த தினம்.
02:17
Read
இன்று பிறந்த நாள்:- மே-08.
அமெரிக்க உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மே-8, 1947 பிறந்தவர்.
குழந்தையாக இருந்தபோதே, வண்ணத் துப்பூச்சி போன்ற பூச்சிகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இறந்த உயிரினங்களை வகைப்படுத்துவதில் ஈடுபட்டார்.
சிறு வயதுமுதல் தாயின் ஆலோசனைப்படி அறிவியலில் ஆர்வம் பிறந்தும், பல்வேறு சோதனைகளையும் செய்தார்.
பள்ளிப் படிப்பை முடித்ததும், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்ஐடி) சேர்ந்து, கணிதம், பொருளாதாரத்தில் இரு இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பயின்றார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.
எம்ஐடி-யில் உயிரியல் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்ததும், ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார்.
ஆராய்ச்சிகள்:-
ஒட்டுண்ணி அல்லாத நூற்புழுவை மாதிரி உயிரினமாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதில் நரம்பணு வளர்ச்சி உட்பட பல்வேறு வளர்ச்சி குறித்து ஆராய்ந்தார்.
நூற்புழுக்களைக் கொண்டு செல் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து வகைப்படுத்தினார். இதற்காக 2002-ல் சிட்னி பிரென்னர், ஜான் சல்ஸ்டன் ஆகியோருடன் இவருக்கும் கூட்டாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியியல், எலெக்ரோ ஃபிசியாலஜி, லேசர் மைக்ரோசர்ஜரி, ஃபார்மகாலஜி ஆகிய களங்களைப் பயன்படுத்தி, நரம்பு மண்டல அமைப்பை மரபணுக்கள் கட்டுப்படுத்துவதையும், நரம்பு மண்டல அமைப்பு, நமது நடத்தையைக் கட்டுப்படுத்துவதையும் ஆராய்ந்தார்.
பிற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, நூற்புழுவின் மரபணுவில் உள்ள 100 மைக்ரோ ஆர்என்ஏக்களின் தொகுப்பை வகைப்படுத்தினார்.
ஹெட்ரோக்ரானிக் மரபு பிறழ்வு, செல் பிரிவு, செல் வளர்ச்சி, செல் வரிசையின் மற்ற அம்சங்கள், சமிக்ஞை கடத்திகள், உருவத் தோற்றம், நரம்பு வளர்ச்சி ஆகியவை தொடர்பாக ஏராளமான நுட்பங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார்.
செல் உயிரிழப்பின் காலகட்டத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டார்.
புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கான சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இவரது கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன.
நூல்கள்:-
250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
பதவிகள்:-
தற்போது எம்ஐடி உயிரியல் துறையில் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
விருதுகள்:-
மூலக்கூறு உயிரியலில் NAS விருது -1988,
நோபல் பரிசு பிசியாலஜி அல்லது மெடிசின் -2002
க்ரூபர்ஸ் பிரைஸ் இன் ஜெனீடிக்ஸ்,
விலே பரிசு விருது-2002,
2007 UK ஜெனிட்டிக்ஸ் சொசைட்டி மெண்டல் மெடல்
2009 ராயல் சொசைட்டி வெளியுறவு உறுப்பினர் (ForMemRS).
உயிரியல் ஆராய்ச்சியில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள இவர் இன்றும்70 வயதை கடந்தும் வாழ்ந்து வருகிறார்.
மே-08. அமெரிக்க உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்- ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
02:17
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
02:17
Rating: 5


No comments: