Breaking

தும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா ??


தும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா ??



தும்மினால் ‘ஆயுசு 100’ என்பார்கள். அதுவே இரண்டாவது முறை தும்மினால் ‘ஆயுசு 200’ என்றும் சொல்வார்கள். தும்மியவர்கள் எல்லாம் நீண்ட ஆயுளுடன்
இருப்பார்கள் என்பதற்கு எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. ஏனெனில் அடிக்கடி இருமிக்கொண்டும், தும்மிக்கொண்டும் இருக்கும் நபர்களில் பலருக்கும் சைனஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு அதிகம். கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதி, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், மூளை மூக்கு ஆகிய இடங்களில் உள்ள காற்றுப்பைகள் நாம் சுவாசிக்கும் காற்றை குறிப்பிட்ட வெப்பநிலையில் சுவாச மண்டலத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளின் உட்புறத்திலுள்ள சவ்வுப்படலம் சுரக்கும் திரவம் நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரப்படுத்தி, சுவாசப் பாதைக்கு அனுப்புகிறது.


சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் வெளியேற முடியாமல் காற்றுப் பையிலேயே தங்கி அடைபட்டு போய்விடும். மேலும் சவ்வுப்பகுதி அழற்சியால் வீக்கமடைந்துவிடும். அதன் உட்சுவர் தடிமனாகும். தேங்கிய சவ்வு நீர் தொற்றுகளினால் சளியாக மாறிவிடும். இப்படித்தான் சைனஸ் அழற்சி ஏற்படுகிறது. அழற்சிக்கான காரணங்கள்அலர்ஜி எனப்படும் சுவாச ஒவ்வாமையும், அதனால் ஏற்படும் நாசி அழற்சியும்தான் சைனஸ் பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

No comments:

Powered by Blogger.