10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை..
10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இதனிடையே, வரும் ஜூன் மாதம் 3 ஆவது மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும் 10 நாட்களில் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக இருக்குமாறும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments: