பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு ஆன்லைன் தேர்வு.. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 13-ஆம் தேதி நடக்கிறது
பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு ஆன்லைன் தேர்வு..
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 13-ஆம் தேதி நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நாள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பொது அறிவு திறன் தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது முதற்கட்ட தேர்வில் மாவட்டம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர்
தற்போது இரண்டாம் கட்ட தேர்வு வரும் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது அதில் பள்ளி பாடங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் மேலும் இறுதிகட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் முதற்கட்ட தேர்வில் 75 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ள பள்ளி மாணவர்கள் நேரடியாக இறுதி கட்ட தேர்வுக்கு தகுதி செய்யப்பட்டுள்ளனர்..
மேலும் இறுதி கட்ட ஆன்லைன் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் மேலே உள்ள செய்திதாளில் இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த முகவரியில் தெரிந்து கொள்ளலாம்..மேலும் முதற்கட்ட தேர்வில் பயன்படுத்திய செல்போன் எண் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்


No comments: