பிளஸ் 2 விடைத்தாள் திருத்த மூன்று மடங்கு கூடுதல் மையங்கள். கல்வித்துறை அதிகாரிகள் முடிவு..

கொரனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்ட நிலையில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்னும் ஒரு தேர்வு நடத்த வேண்டியுள்ளது. அதேசமயம் பத்தாம் வகுப்பிற்கு ஒரு தேர்வு கூட தொடங்கவில்லை இதனிடையே பத்தாம் வகுப்புக்கான தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தேர்வு கால அட்டவணை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பிளஸ் 2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோன பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் எண்ணிக்கையை 3 மடங்கு கூடுதலாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட பள்ளிக்கல்வித்துறை முயன்று வருகிறது அதன்படி ஓரிரு வாரங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப் படுகிறது அதேசமயம் விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கறோனா தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஏற்கனவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று முதல் ஐந்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன தற்பொழுது அந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு வரை கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விசாலமான ஹால் மற்றும் கோரோனோ நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: