Breaking

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?





ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?

கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..? வழிமுறைகள் என்ன என்கிற விபரமும் வெளியாகி உள்ளது.

மதுரை மாடக்குளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மூளிகை பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க.வினரும் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இதன்மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 32,965 ரேசன் கடைகள் மூலம் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களும், நிவாரணத் தொகை ரூ.1000-ம் வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், நகைக் கடனாக கிராமுக்கு ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு ரேசன் கார்டை ஆவணமாக பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த காலத்தில் தொகையை செலுத்தினாலும் மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழகத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை''என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அறிவித்த ரூ.50000 பணத்தை அந்தந்தப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும், 4,645 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிகபட்சம் கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை தனி நபர் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படி ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொள்ள நிறைய வழிகாட்டுநெறிமுறைகள் உள்ளன. அவற்றை எளிமைப் படுத்தி இந்த 50000 ரூபாயை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை 350 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.