தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு..
தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு
40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய-தலைமையாசிரியர், மகாலட்சுமி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள்..
பொதுமக்கள் பாராட்டு..
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மிட்டா புதூர்,சேலம் மாவட்டம்..
இன்று
தனது பள்ளியில் பயின்று வரும் மாணவ/ மாணவியர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
ஒவ்வொருவருக்கும்
வழங்கப்பட்ட பொருட்கள்:-
அரிசி 5 கிலோ
எண்ணெய் 1 லிட்டர்
து.பருப்பு. 1 கிலோ
பாசிபருப்பு 1/2 கிலோ
சுண்டல் 1/2 கிலோ
தட்டப்பயிறு 1/2 கிலோ
கடுகு 1/4 கிலோ
சாம்பார் தூள்200 கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
உப்பு 1 கிலோ
மற்றும்
பிஸ்கட் .
இதனால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளி கடைபிடித்து
மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மகிழ்வுடன் பெற்றுச்சென்றனர்.
இதன் மூலம், 80 மாணவர்களின் குடும்பங்கள், ₹500/- மதிப்புள்ள பொருட்கள் பெற்று பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தன்னுடைய பிள்ளைகளின் குடும்பங்களுக்காக பள்ளியில் பணிபுரிகின்ற ஒவ்வொரு ஆசிரியரும் (H.M -மூ.ஜெயராணி,
உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி,
ஆங்கில பட்டதாரி ஆசிரியை, க.உமா,
அறிவியல் பட்டதாரி ஆசிரியை த.லதா மற்றும்
இடைஆசிரியர்கள் பா.ஜெயந்திமாலா,
கோ.தாரகேஸ்வரி,
மற்றும் க.சங்கீதா)
தலா ரூ 5 ஆயிரம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்களது பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு உதவி செய்வதில் மனம் மகிழ்ச்சி அடைகின்றது என்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூறினார்கள்..
நன்றிகளையும் தெரிவித்தார்கள்





No comments: