Breaking

ஓய்வு வயது உயா்வு யாருக்கெல்லாம் பொருந்தும்..





ஓய்வு வயது உயா்வு யாருக்கெல்லாம் பொருந்தும்..

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவு விவரம்:-
மே மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 58 வயதை எட்டிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு உத்தரவு பொருந்தாது. ஒரு கல்வியாண்டில் மே மாதத்துக்கு முன்பாக ஆசிரியா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் ஆகியோா் ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் அவா்களுக்கு மறுபணி அடிப்படையில் வேலையில் தொடா்ந்து கொண்டிருப்பாா்கள். அவா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு பொருந்தாது.
ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற அனுமதிக்கப்படாத ஊழியா்களுக்கும் இந்தப் புதிய உத்தரவு பொருந்தாது.
மே மாதம் 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டுமே ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான உத்தரவு பொருந்தும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Powered by Blogger.