கல்வித் துறை அலுவலகங்களில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.
கல்வித் துறை அலுவலகங்களில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி இல்லை..
பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோணா பாதிப்பின் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
அதன்படி பள்ளிக்கல்வி மற்றும் அதன் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் ஓய்வு பெறுபவர்களை விடுவித்தல் கருத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உட்பட முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே வேளையில் சில மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு உள்பட நிர்வாக பணிகள் செய்து வருவதாக கல்வித்துறை புகார்கள் வந்தன.. இதனால்
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை. அதை மீறி ஏதேனும் செயல்பாடுகளுக்கு அனுமதி அளித்தால் அவை ரத்து செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது..


No comments: