Breaking

சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும்! பற்றி விளக்கம்..


சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும்! பற்றி விளக்கம்..

www.tamilsciencenews.in
ஜெட் போர் விமானம் சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும் எப்படிப் பறக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
சாதாரண விமானத்தில் என்ஜின், சுழல் விசிறி, இறக்கைகள் இருக்கின்றன. என்ஜின், சுழல் விசிறியை இயக்குகிறது. அது சுழலும்போது காற்றை முறுக்கித் திருப்புகிறது. அதன் விளைவாக விமானம் முன்னோக்கி இழுக்கப்படுகிறது.
நமக்குக் கைகள் இருப்பதைப் போல விமானத்துக்கு இறக்கைகள் இருக்கின்றன. காற்றைப் பற்றிக் கொண்டு நிலையாகப் பறப்பதற்கு இறக்கைகள் உதவுகின்றன. இவ்வாறுதான் சாதாரண விமானம் பறக்கிறது.



`ஜெட்’ விமானம் பறப்பதற்குச் சுழல் விசிறி தேவையில்லை. அதன் என்ஜினில் எரிபொருள் எரியும்போது சூடான வாயுக்கள் விமானத்தை முன்னோக்கித் தள்ளுகின்றன. விமானத்துக்குப் பின்னால் வால் மாதிரி நெருப்புத் தெரியும். வாயுக்கள் எரிவதால் அந்தத் தோற்றம் ஏற்படுகிறது.
பயணிகள் விமானம் எல்லா `ஜெட்’ விமானங்களும் ஒலியைவிட அதிக வேகமாகப் பறக்கின்றன. எனவே `ஜெட்’ போர் விமானத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. `ஜெட்’ விமானத்தின் இறக்கைகள் அம்பைப் போல் இருக்கின்றன. அதன் உடற்பகுதி நத்தையின் ஓடு போலத் தோற்றம் அளிக்கிறது. என்ஜின், ராக்கெட்டைப் போல் அமைந்திருக்கிறது.
விண்வெளி வீரர் அணிந்திருக்கும் உடையைப் போலவே `ஜெட்’ விமானியும் உடை அணிந்திருக்கிறார். ஏன் அந்த உடை? கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் விமானம் செல்லும்போது விமானி மீது சுழல்விசை அழுத்தம் ஏற்படாமல் அந்தச் சிறப்பு உடை தடுக்கிறது.
ஜெட் விமானம் சில வினாடிகளில் மேகங்களைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. அது சென்றபிறகுதான் அதன் இடியோசை போன்ற உறுமலைக் கேட்க முடிகிறது.

No comments:

Powered by Blogger.