நின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
நின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.
தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது.
இது நிறைவான உணர்வை தருவதோடுகலோரிகளையும் எளிதாக எரிக்கும்.
No comments: