புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புரொட்டீன் துகள்கள் பற்றி அறிவோம்..
புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புரொட்டீன் துகள்கள்
பற்றி அறிவோம்..
குணப்படுத்த முடியாத நோயாக மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு சிலவற்றில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. சிறு கட்டியாக உருவாகும் இதை ஓரளவு முற்றிய நிலையில்தான் கண்டறிய முடியும்.
அதன்பிறகு, இதை மேலும் வளர்ச்சியடையாமல் அல்லது பரவிவிடாமல் தடுக்கத்தான் இதுவரை சிகிச்சைகள் உள்ளன. எத்தனை முறை சிகிச்சை செய்தாலும் மரணம் நிச்சயம் என்பதுதான் புற்றுநோயின் முடிவு. புற்றுக்கட்டி என்ற நிலையிலிருந்து புற்றுநோயாக மாறும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது. ரத்தத்தில் புற்றுநோய் கிருமிகள் கலக்கும். பிறகு அது உடல் முழுவதும் பரவும். 90 சதவீத மரணங்கள் புற்றுக்கட்டியாக இருந்து புற்றுநோயாக மாறும்போதுதான் நிகழ்கின்றன.
இப்படிப்பட்ட அபாயகரமான கட்டத்தில் புற்றுநோய்க் கிருமிகள் ரத்தத்தில் பரவுவதை எதிர்த்து சமாளிக்க புதிய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ரத்தஓட்டத்தில் தங்கி ரத்தத்தில் பரவும் புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் நுண்துகள்களை வடிவமைத்துள்ளனர். ஒட்டும் சிறு பந்துகள் என்று இவற்றை அழைக்கிறார்கள். ட்ரைல் என்று அழைக்கப்படும் புற்றுநோயைக் கொல்லும் புரொட்டீன் ஏற்கெனவே சிகிச்சைக்கு உதவுகிறது. இந்த புரொட்டீன் துகள்கள் ரத்தத்தில் செலுத்தப்படுகின்றன. அவை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களோடு ஒட்டிக் கொள்கின்றன.
இந்த வெள்ளை அணுக்கள் புற்றுக்கட்டியிலிருந்து பிரிந்து பரவ முயற்சிக்கும் புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கின்றன. புற்றுநோய் கிருமிகளோடு உறவாடி அவற்றை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பேராசிரியர் கிங் தெரிவித்துள்ளார்.
இதுவரையிலான சோதனைகள் மனிதர்கள் மற்றும் எலிகளிடம் நடத்தப்பட்டன. இவை அதிசயிக்கத்தக்க வெற்றி பெற்றுள்ளது உண்மைதான். இரண்டு மணிநேர ரத்த ஓட்டத்தில் கிருமிகள் சிதைத்து அழிக்கப்பட்டன. இந்த நுண்துகள்கள் புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முன்னதாகவோ, ரேடியோதெரபி சிகிச்சைக்கு முன்னதாகவோ பயன்படுத்தப்படலாம். தவிர, வெகு தீவிரமடைந்த நிலையில் உள்ள புற்றுக்கட்டிகளுடைய நோயாளிகளுக்கும் இது பயன்படுத்தப்படலாம்.
இருந்தாலும், மேலும் பாதுகாப்பான சோதனைகளை எலிகள் மற்றும் பெரிய விலங்குகளிடம் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன்பிறகுதான் மனிதர்களுக்கு இந்தச் சிகிச்சையை பயன்படுத்த முடியும். இதுவரையிலான சோதனையில் இந்த நுண்துகள்கள் செயல்படும்போது ரத்தத்தில் உள்ள நோய்எதிர்ப்பு சக்திக்கோ, மற்ற ரத்த அணுக்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
எனினும், புற்றுநோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சை பலனளிக்க வேண்டுமென்றால் பல்வேறு விஷயங்களை தெளிவு
படுத்த வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எப்படியோ புற்றுநோயை முற்றாக ஒழிக்கவோ, புற்றுநோய் வராமல் தடுக்கவோ சிகிச்சை கண்டுபிடிக்க இன்னும் காலம் செல்லலாம்.
No comments: