பச்சைப்பயறு மாங்காய் சுண்டல் என்னென்ன தேவை?
பச்சைப்பயறு மாங்காய் சுண்டல்
என்னென்ன தேவை?
பச்சைப்பயறு - 200 கிராம்,
துருவிய மாங்காய் - 2,
துருவிய தேங்காய் - சிறிதளவு,
சின்ன வெங்காயம் - 5 நறுக்கியது,
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது,
கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய், கொத்தமல்லி - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் பச்சைப் பயற்றை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு, வறுத்த பச்சைப்பயற்றைப் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாசனை போனவுடன் வேகவைத்துள்ள பச்சைப்பயறு சேர்த்துக் கிளறுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு மாங்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறுங்கள்.


No comments: