பள்ளி தலைமை ஆசிரியரின் கண்கலங்க வைத்த செயல்..!! அரியலூரில் நெகிழ்ச்சி.!!
பள்ளி தலைமை ஆசிரியரின் கண்கலங்க வைத்த செயல்..!! அரியலூரில் நெகிழ்ச்சி.!!
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள துப்பாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியை கண்ணகி. இவர் கடந்த 12 வருடமாக துப்பாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கல்வி போன்ற சேவை மட்டுமின்றி கிராம மக்களின் நிலை குறித்தும் நன்கு அறிந்து, அவ்வப்போது அவர்களுக்கு தேவையான பிற உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்னிடம் பயின்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதிஉதவி வழங்கியுள்ளார்.
கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக தன்னிடம் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் இன்றி தவித்து வரும் சூழலை அறிந்த ஆசிரியை, அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இதனையடுத்து தனது திட்டப்படி, தன்னிடம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்ற ஆசிரியை, தனது மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். இவரது சேவை உள்ளத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments: