Breaking

முடிவுக்கு வரும் ஊரடங்கு" மத்திய அரசு அதிரடி உத்தரவு ..




முடிவுக்கு வரும் ஊரடங்கு" மத்திய அரசு அதிரடி உத்தரவு ..

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வருக்கு உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 11ஆம் தேதி ( நாளை) மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்கான ரயில் டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் சென்று புக் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.இதில் மும்பை கொரோனாவின் மையமாக திகழ்கிறது. அதே போல சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் முழு ஊரடங்கு மே 17ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிகின்றது.
மே 17ஆம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் முழு தளர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசும் போதும் ஊரடங்கை விலக்கி கொள்வது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.