தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அம்சங்கள்:
போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:
* முதல் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்
* இரண்டாவது மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
* மூன்றாவது மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
* நான்காவது மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
* ஐந்தாவது மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
* ஆறாவது மண்டலம்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
* ஏழாவது மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
* எட்டாவது மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி
* தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி...
* விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி...
* நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
* திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி
* பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை
* ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும்.
* ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்
* அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி
* ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை
* மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
* மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
* 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
* தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
* ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி
* ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
* 5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது
* சலூன்கள், அழகு நிலையம், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி
* வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
* வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை
* வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும்.
* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும்
* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேர்கள் பங்கேற்க அனுமதி.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு.
*மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி மறுப்பு
* ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை தொடர்கிறது
* கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை
* தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
* தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்
* 20 சதவீத தகவல் தொழில்நுட்பம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்
* கரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு
* நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.
1 comment:
ஐயா ஜாலி