Breaking

முட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..?


முட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..?



முட்டை புரதச் சத்து நிறைந்த உணவு என்பதாலேயே பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் தினசரி உணவில் கட்டாயம் முட்டையைச்
சேர்க்கிறார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு முட்டை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலர் முட்டைதான் அதற்குக் காரணம் எனத் தெரியாமலேயே பதறிப்போய் மருத்துவமனையை நாடுவார்கள். சில பெற்றோர்களுக்கு முட்டை அலர்ஜியை ஏற்படுத்துமா என்பதே சந்தேகம்தான்.

இனியும் சந்தேகம் வேண்டாம், நிச்சயம் அது அலர்ஜியை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வுகள். ஆய்வு மட்டுமன்றி மருத்துவர்களும் முட்டைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் குணம் இருக்கிறது என்கின்றனர்.
அதாவது குழந்தைக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் உணர்திறன் அதிகம் இருந்தால் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் உள்ள புரோட்டின் கூடுதலாக ஆற்றல் பெறும்.
அது அளவுக்கு அதிகமாக வேலை செய்யும்போது, உடல் தானாகவே அதை சமன் செய்ய முயற்சி செய்து அதிக கெமிக்கல்களை வெளியிடும். அந்த கெமிக்கல் வெளியாகும்போது உடலில் சில அறிகுறிகள் உண்டாகும்.இந்தக் குறைபாடு 2 சதவிகித குழந்தைகளுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த முட்டை அலர்ஜி என்பது 16 வயது வரை மட்டுமே இருக்கும். அதன்பின்னர் உடல் மாற்றங்களால் அந்த அலர்ஜி தானாகவே சரியாகிவிடும் என்கின்றனர்.

அப்படி ஒருவேளை உங்கள் குழந்தைக்கும் முட்டை அலர்ஜி இருந்தால் எப்படி கண்டறிவது..?பொதுவாகவே உடல் ஏற்றுக்கொள்ளாத, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள், தலை சுற்றல், வாந்தி , அஜீரணம், வயிற்றுப்போக்கு, மூச்சுத்தினறல், தொடர் இறுமல், வயிற்று வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதே பிரச்னைகள்தான் முட்டை கொடுக்கும்போதும் உங்கள் குழந்தைக்கு வரும். முட்டை மட்டுமல்லாமல் மற்ற எந்த உணவை குழந்தைக்கு கொடுக்கும்போதும், இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அதை அலட்சியமாக விட்டுவிடாதீர்கள்.
உடனே மருத்துவரை அணுகி தீர்வு காண்பது அவசியம். ஏனெனில் சில உணவு அலர்ஜி உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். ஒருவேளை உங்கள் குழந்தைக்கும் முட்டை அலர்ஜி இருப்பது உறுதியானால் இனி என் குழந்தைக்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும் எனக் கவலை கொள்ளாதீர்கள். முட்டை மட்டுமே அதற்கு தீர்வாகாது. அதற்கு பதிலாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அளிப்பதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண்பதே குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

No comments:

Powered by Blogger.