Breaking

நிலவில் கான்கிரீட் தயாரிக்க பயன்படும் சிறுநீர்..






நிலவில் கான்கிரீட் தயாரிக்க பயன்படும் சிறுநீர்..

எதிர்காலத்தில் நிலவில் வீடு கட்டுவதற்கு, மனிதர்களின் சிறுநீர் முக்கிய கலவை பொருளாக ஒருநாள் இருக்க கூடுமென ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மனிதர்களின் சிறுநீரில் உள்ள முக்கிய பொருளான யூரியா, நிலவுக்கான கான்கிரீட் கலவையை அதன் உறுதியான இறுதி வடிவத்தில், கடினமாவதற்கு முன்பு அது மிகவும் இணக்கமானதாக மாற்ற உதவுமென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், நிலவில் தளம் அல்லது பிற கட்டுமானங்களை கட்டுவதற்கு அங்கிருக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தினால், பூமியில் இருந்து பொருட்களை கொண்டு செல்வதற்கான தேவையை குறைக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.லூனார் கான்கிரீட் கலவைக்கான முக்கிய மூலப்பொருள் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் தூள் மண் அல்லது லூனார் ரெகோலித் எனப்படுவதாகும்.

யூரியாவானது, ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைத்து திரவ கலவைகளின் பாகுத்தன்மையைக் குறைப்பதால், கான்கிரீட் தயாரிப்பிற்கு தேவையான நீரின் அளவை கட்டுப்படுத்தும். 'வருங்காலத்தில் நிலவில் குடியேற இருக்கும் மக்களுக்கு நன்றி, ஒரு நபர் ஒவ்வொரு நாளும் உருவாக்கும் 1.5 லிட்டர் திரவ கழிவுகள் விண்வெளி ஆய்வுக்கான ஒரு நல்ல தயாரிப்பு' என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பூமியில் யூரியா விவசாய பயன்பாட்டில் உரமாகவும், தொழிற்சாலைகளில் ரசாயனம் மற்றும் மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.நடைமுறைப்படுத்த கூடிய ஒன்று'இது மிகவும் நடைமுறைப்படுத்த கூடிய ஒன்று. மேலும் விண்வெளியில் அதிநவீன முறையில் நீரை மறுசுழற்சி செய்வதில் உள்ள சிக்கலுக்கான அவசியத்தை தவிர்க்கும். எதிர்காலத்தில் நிலவில் அடித்தளம் அமைப்பதற்கு, நீருக்கு பதிலாக சிறிய மாற்றம் செய்து விண்வெளி வீரரின் சிறுநீரை முக்கியமாகப் பயன்படுத்தலாம்' என ஆய்வு குழுவின் இணை ஆசிரியர் மார்லீஸ் அர்ன்ஹோஃப் தெரிவித்துள்ளார்..

No comments:

Powered by Blogger.