ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது..
ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது..
சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பு பணியாக மாவட்ட ஜே.ஆர்.சி கன்வீனர் பிரபாகர் தலைமையில் கல்லேரிப்பட்டி ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் முகக்கவசம்,பிஸ்கட்,சத்துமாவு வழங்கப்பட்டது முன்னதாக பள்ளியின் ஜே.ஆர்.சி ஆசிரியர் ஜோசப் ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் அனைவரும் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் அரசு உத்தரவு படி கூட்டமான இடங்களுக்குச் செல்லக்கூடாது,பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்ற வேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் போன்ற அறிவுரைகளை மாணவர்களுக்கு ஆசிரியர் ஜோசப் ராஜ் கூறினார்.இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், முனிசாமி,ராமச்சந்திரன் , பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.



No comments: