வங்கிக் கடன் தவணை செலுத்த மேலும் மூன்று மாத கால அவகாசம் ரிசர்வ் வங்கி பரிசீலனை....
வங்கிக் கடன் தவணை செலுத்த மேலும் மூன்று மாத கால அவகாசம் ரிசர்வ் வங்கி பரிசீலனை....
நாடு முழுவதும் நான்காவது கட்டமாக மே 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளதால் வங்கிக் கடனைச் செலுத்துவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படும் என தெரிகிறது கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு அறிவித்த பின்னர் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அட்டை 3 மாத அவகாசம் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது இந்த மூன்று மாத கால அவகாசத்தை பயன்படுத்துவதால் சிபில் மதிப்பெண் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது மார்ச் 1 முதல் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை 31ஆம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி கடன் தவணை செலுத்த வேண்டிய கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது மேலும் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்று தெரிகிறது பொதுவாக வங்கி கடனை தொடர்ந்து மூன்று மாதங்கள் செலுத்தாமல் இருந்தால் அது வாரக்கடன் ஆக கருதப்படும் அடுத்த கட்டமாக நடைமுறை நடவடிக்கை எடுக்க வழி ஏற்படும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி மூன்று மாதம் சலுகை அளித்தது இது மேலும் 3 மாதம் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது


No comments: